அனுதாபம் காட்டி மகிந்தவின் பதவியை காப்பாற்றினோம்: துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வர பாடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் கடந்த காலம் குறித்து வெறுப்படைந்திருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெறுப்படைந்துள்ளவர்கள் தமது நிலைப்பாடுகள் தொடர்பாக பேச சந்தர்ப்பம் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படும்.

துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபல சிறிசேன எனவும் எமது வேட்பாளரே 2025ஆம் ஆண்டு வரை நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார் என அச்சமின்றி கூறியவன்.

மிகவும் பரிவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காத்து கொள்ள மகிந்த அணியினருக்கு உதவி பதவிகளை காப்பற்றி கொடுத்தோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் தாம் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் என மிகவும் கௌரவமாக கூறிக்கொண்டனர். சட்ட ரீதியான பிரச்சினை எழுந்த போது இல்லை நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அல்ல என்றனர். எமது அணியினர் என்பதால், நாங்கள் அவர்களுக்கு இடங்கொடுத்தோம்.

எனினும், தற்போது நன்மையை பெற்றுக்கொண்டு தமது உண்மையாக கட்சி எதுவென்று கூற ஆரம்பித்துள்ளனர். இது தான் உண்மையான யதார்த்தம். யார் என்ன கூறினாலும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.

அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை காப்பாற்றி கொடுக்க நாங்கள் உதவி செய்தோம். அனுதாபத்தில் நாங்கள் அதனை செய்தோம்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேறு எவரோ தனிக்கட்சியை ஆரம்பிக்க அவசியமில்லை.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் என்ற வகையில், கடந்த காலம் குறித்து வருத்தமும் மனகவலையும் உள்ளது. இது பற்றி பேசுவது தனிக்கட்சியை தொடங்குவதோ, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது என்றோ அர்த்தப்படாது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த அணியினருக்கு ஏதேனும் மனவருத்தம் இருந்தால், பேசுவதற்கு ஒரு இடம் இருக்க வேண்டும் என்பதுடன் பேசவும் வேண்டும் என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.