நிர்வாகத்துறையின் அடிப்படையை மீறிய மங்கள! பந்துல குணவர்த்தன குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சர் மங்கள சமரவீர நிர்வாக சேவையின் அடிப்படையை மீறியுள்ளார் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்துக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் பிரதான மையமான சுங்கப்பிரிவின் பணிப்பாளராக முன்னாள் கடற்படை அதிகாரியை நியமித்தமைக்கு எதிர்க்கட்சி எதிர்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்தக்குற்றச்சாட்டை இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது முன்வைத்துள்ளார்.

நிர்வாக சேவையில் உள்ள பெண் ஒருவரை விலக்கிவிட்டே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் அசாதாரண தனித்தச் செயற்பாடாகவே தாம் பார்ப்பதாக பந்துல குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.