தேர்தல் சட்டத்தை புதுப்பிக்குமாறு கோரும் தேர்தல் ஆணைக்குழு!

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தல் சட்டத்தை புதுப்பிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலை முறையாகவும் வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தும் வகையில் செயற்பாடுகளை வலுப்படுத்தவும் சகல பிரஜைகளின் பங்களிப்புடன் தேர்தலை நடத்தவும் சட்டத்தை புதுப்பிப்பது அத்தியவசியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்பு தேர்தல் சட்டத்தில் திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக தலையீடுகளை மேற்கொள்வது முக்கியமானது எனவும் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.