புதிய அரசமைப்பு ஒருபோதும் வராது அடித்துக் கூறினார் அமைச்சர் மனோ

Report Print Rakesh in அரசியல்

புதிய அரசமைப்பு ஒருபோதுமே வராது, அது நடக்காது அதற்கான காலம் கடந்து விட்டது என அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியலயம் ஆகியன இணைந்து நடத்திய மெய்வன்மைப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நான் மக்களிடம் உண்மையைச் சொல்லவே விரும்புகின்றேன். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. புதிய அரசமைப்பு வரவேவராது.

இந்த அரசமைப்பு வர வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நான் எப்போதுமே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் போன்று இந்த அரசமைப்பு வரவேண்டும் என்ற உறுதிப்பாடு என்னிடம் இருக்கின்றது.

ஆனாலும், நான் மக்களிடம் உண்மையைச் செல்ல விரும்புகின்றேன். வழிகாட்டல் குழுவுக்குள் இருக்கும் சூழல் நன்றாக இல்லை. ஆகவே, இந்த அரசமைப்பு வர வாய்ப்பில்லை என்று இரு வருடங்களுக்கு முன்பே சொன்னேன். ஆனால், அதனை யாரும்

கேட்கவில்லை. நான் அன்று சொன்னது இன்று சரியாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...