ஐ.தே.கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்! அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தலை ஒத்திவைக்கும் எந்த தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றி நிச்சயம் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மாகாண சபைத் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தியது. அமுலில் இருக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே தேர்தலை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு நபர்களுக்கு தேவையான வகையில் தேர்தலை நடத்த முடியாது. எந்த முறையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி அவசியம்.

எதிர்காலத்தில் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் பக்கம் மக்கள் இணைவார்கள். அத்துடன் அரசாங்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...