ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை! சீ.வி.விக்னேஸ்வரன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஒற்றையாட்சி எண்ணக்கருவை தான் ஏற்றுக்கொள்ளவில்லை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒற்றையாட்சி எண்ணக்கரு என்பது வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாகாது. ஒற்றையாட்சி என்று கூறும் போது, சிங்கள நிர்வாகம் என்ற அர்த்தம் ஏற்படும்.

மக்களை ஏமாற்றுவதற்காக பலவேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஒருமித்த நாடு என தமிழில் கூறுகின்றனர். அதன் அர்த்தம் ஐக்கிய நாடு என்பதாகும். அது ஒற்றையாட்சி நாடு என்று அர்த்தமாகாது எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.