ஜோர்ச் பெர்னாட்ஷாவின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் அளப்பரிய பங்காங்கிய ஜோரடச் பெர்னாட்ஷாவின் மறைவுக்கு தமிழ் மக்கள் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துகூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

1980களின் பின்னர் தமிழீழ விடுதலை போராட்டங்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ஜோர்ச் பெர்னாட்ஷா அந்தக்காலம் தொடக்கம் தமிழ் மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் அளப்பரிய பங்கை ஆற்றியவர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலை புலிகள் இதோ கைப்பற்றி விடுவார்கள் என நம்பப்பட்ட காலத்தில், அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இந்தியாவின் உதவியைகோரியபோது அதனை மறுத்து இந்திய இராணுவம் இனி ஒருபோதும் இலங்கை மண்ணில் கால் வைக்காது என உறுதியாக கூறியவர் ஜோர்ச் பெர்னாட்ஷா.

அதேபோல் தமிழீழ விடுதலை புலிகளை,சர்வதேக கடலில் இந்திய கடற்படை வழிமறித்தபோது சர்வதேச கடலில் வைத்து ஒன்றும் செய்யக்கூடாது என கூறியவர் ஜோர்ச் பெர்னாட்ஷா.

அப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிகள் ஊடாக தமிழீழ விடுதலை போராட்டத்தையும், தமிழ் மக்களுக்கும் நன்மைகளை செய்தவர் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவருடைய இழப்புக்கு தமிழ் மக்கள் சார்பில் எங்களுடைய வீர வணக்கங்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் கூறுகின்றோம் என்றார்.

Latest Offers

loading...