இந்த ஆண்டில் புதிய அரசாங்கமொன்று உருவாகும்: ஜனாதிபதி ஆரூடம்

Report Print Kamel Kamel in அரசியல்

இந்த ஆண்டில் புதிய அரசாங்கமொன்று உருவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆண்டான இந்த ஆண்டில் புதிய அரசாங்கம் உருவாகும், உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நாட்டை நேசிக்கும் விரிவான மக்கள் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மரபு ரீதியில் அரசியல் சக்திகளையும் அரசியல்வாதிகளையுமே தோற்கடித்துள்ளோம், எனினும், தற்போழுது துரோகி யார் என அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளிலும் நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளைப் போன்றே நாட்டுக்கு துரோகம் இழைக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.

நாட்டை நேசிக்கும் தரப்பினருடன் இணைந்து சுயநலவாதிகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.