அமைச்சர் சஜித்தின் மற்றுமொரு திட்டம் அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசாங்கத்தின் அரசியல் பயணம் மக்களுக்குக் கூடுதலான சலுகை அளிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டது.

நல்லாட்சி அரசாங்கம் பல வருட காலம் அமுலாக்கிய நிவாரணத் திட்டம் சமீபகாலமாக முடங்கியிருந்தது.

அதனை மீண்டும் அமுலாக்கி கர்ப்பிணித் தாய்மாருக்கு நன்மை வழங்கப் போவதாக” அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.