அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை ஏற்படுத்துகின்றார் மகிந்த!

Report Print Murali Murali in அரசியல்

அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.

அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

அனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.