மகிந்த ராஜபக்ச புதிய சேவையொன்றை தொடங்கி அதிரடி நடவடிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

அரசியல் பழிவாங்கலுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் சேவையொன்றை எதிர்க் கட்சிக் காரியாலயத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரயிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல், முறையற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட ஆலோசனை வழங்கும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 6ம் திகதி முதல் பிரதி புதன்கிழமைகளிலும் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு 7, ஸ்ரீமத் மார்க்கஸ் பிரணாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த சட்ட ஆலோசனை சேவை இடம்பெறவுள்ளது.

Latest Offers

loading...