அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! சிறிநேசன்

Report Print Nesan Nesan in அரசியல்

மாகாண சபைகளுக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாத விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுவதுதான் சமஷ்டி பண்புடைய அரசியல் யாப்பு என்பதனை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மகிழூர்முனையில் இன்று இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அதுமட்டுமல்லாது பாராளுமன்றமானது இரண்டு சபைகளை கொண்டிருக்க வேண்டும். ஒன்று மேல்சபை மற்றையது கீழ்சபை இவை சோல்பரி யாப்பில் இருந்தன.

ஆனால் ஒழுங்கான சபையாக இருக்கவில்லை. மத்தியரசுக்கும் மாநில அரசுக்கும் மாநில அரசுக்கும் பிணக்குகள் ஏற்படுகின்ற போது நடுநிலையான சமஷ்டி நீதிமன்றம் இருக்க வேண்டும்.

இப்படியான பண்புகளை கொண்டிருந்தால் சமஷ்டி பண்புடைய அரசியல் யாப்பாக கொள்ளமுடியும்.

அந்த அடிப்படையில் மத்தியரசு மாகாண அரசுக்கு வழங்குகின்ற அதிகாரங்களை மத்திய அரசு நினைத்தவாறு பறித்துகொள்ளாத வகையில் அந்த அரசியல் யாப்பு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்க்ஷ ஆட்சிபீடமேறியபோது யார்?யார்? துதிபாடியவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

சிலர் மஹிந்த தரப்பிற்கு துதிபாடிக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னா பின்னா படுத்தி பலவீனமாக்கி தமிழர்கள் அதிகாரமில்லாமல் செயற்பட வேண்டும் என சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. அந்த சக்திகள் எவையென நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.