மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைகளை கலைத்து விடுமாறு கோரிக்கை! முதலமைச்சராக பசில்?

Report Print Ajith Ajith in அரசியல்

ஒரே நாளில் 9 மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதற்காக மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைகளை கலைத்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஏனைய மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த மூன்று சபைகளும் இன்னும் சில மாதங்களில் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யவுள்ளன.

இந்த நிலையில் குறித்த மூன்று சபைகளினதும் முதலமைச்சர்கள் தமது சபைகளை கலைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தேவப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மேல்மாகாண முதலமைச்சர் பதவிக்காக பொதுஜன பெரமுனயில் இருந்து பசில் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் எவ்வித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.