சந்திரிக்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சி என்பது மிகப் பெரிய கூட்டணி, அந்த கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிதாக இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மிகப் பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான யாப்பை தயாரித்து வருகின்றோம். அதற்கான பொறுப்பை வழங்கி குழுவொன்றை நியமித்துள்ளோம். நாங்கள் தற்போது ஒரு கூட்டணியாக செயற்பட்டு வருகின்றோம்.

தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மோதல் நிலவுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.