தேர்தல் ஆணையாளரை நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கோரும் நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்
67Shares

நடைமுறையில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய தேர்தல் ஆணையாளருக்கு தேர்தலை நடத்த முடியாது என்றால், நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவது பொருத்தமானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கு இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் அவர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரலாம். இல்லை எனில், சுயாதீன தேர்தல் ஆணையாளர் பதவியில் இருப்பதற்கு பதிலாக பதவி விலகலாம்.