முக்கிய பதவிகளில் தமிழர்கள் யாருமில்லாத கிழக்கு ஆளுநரின் அதிரடி நியமனங்கள்..

Report Print Dias Dias in அரசியல்

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியமான அனைத்து திணைக்களங்களிலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருப்பது தமிழர்களே.

எனினும் புதிய ஆளுநராக கிழக்கு மாகாணத்திற்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து முக்கியமான திணைக்களங்களிலும் முஸ்லிம்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இந்த நியமனமானது கண்துடைப்பாகவே தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது. எனினும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை எதுவும் தெரியாமல் தமது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் என கிழக்கு வாழ் தமிழர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு ஆளுனரால் வழங்கப்பட்ட நியமனங்கள்...

 • சுற்றுலா துறை - A.S.M . Fayis
 • வீடமைப்பு அதிகார சபை - தலைவர் -M.S.Supire, C.M- A.S.M . Fayis, Chairman - A.L.M.Akram
 • மாகாண திறைசேரி - I.M.Huzain
 • ￰இறைவரி திணைக்களம் - M.I.M. Mahir
 • முகாமைத்துவம் - M.M.Halidai
 • மாகாண கணக்காய்வு - H.M.M. Rasheed
 • சட்டம் ஒழுங்கு - A.M.Amiff Lebbe
 • சமூக சேவைகள் அபிவிருத்தி - M.C.Anzar
 • கல்வி திணைக்களம் - M.K.M.Mansoor
 • விளையாட்டு திணைக்களம் - N.M.Nowfees
 • விவசாயத் திணைக்களம் - S.M.Hussain
 • ￰கால்நடை உற்பத்தி திணைக்களம் - A.M.Mohamed Fazi