வடிவேல் சுரேஸ் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு மீண்டும் வருவாரா?

Report Print Ajith Ajith in அரசியல்

பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ் மீண்டும் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருவாரா? என்று பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், இந்த சவாலை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக மூன்று வருடங்களுக்கு முன்னர் சுரேஸ் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார்

பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் 52 நாள் அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட அவர் 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக கூறினார்

எனினும் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ரணிலுடன் இணைந்துக்கொண்டு 1000 ரூபாவை பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கூட்டு உடன்படிக்கையின்படி 20 ரூபா சம்பள உயர்வே வழங்கப்பட்டுள்ளது.

இதனை வடிவேல் சுரேஸ் ஏற்றுக்கொள்வாராக இருந்தால் மீண்டும் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருவாரா? என்று கனக ஹேரத் கேள்வி எழுப்பினார்.