செல்பிக்காக பிரபல அரசியல்வாதியை சுற்றி வளைத்த மாணவர்கள்!

Report Print Dias Dias in அரசியல்

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிரபலமான அரசியல்வாதி என்றாலும் அவர் அதனை விட சிங்கள திரைப்படத்துறையின் சுப்பர் ஸ்டார்.

இதனால், அவருக்கு அரசியல் ஆதரவாளர்களை கடந்து, ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. ஜனரஞ்சக புகழ்பெற்ற நடிகரான ரஞ்சன் ராமநாயக்க அலரி மாளிகையில் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டார்.

பதுளையில் இருந்து வந்திருந்த பாடசாலை மாணவர்கள், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை சுற்றிவளைத்து முட்டி மோதி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

மாணவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.