12 ராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை கையளித்தனர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கான ராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்ட 12 பேர் இன்று முற்பகல், தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த வைபவம் நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்லோவேக்கியா, பெலாரஸ், மாலி, ஆர்மேனியா, எல்செல்வடோர், கம்போடியா, மாலைதீவு, இஸ்ரேல், ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இதனை தவிர, உகண்டா, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.