அமைச்சரவையின் நியமனத்தை தொழிற்சங்கங்கள் எதிர்க்க முடியாது!

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டதாகவும் தொழிற்சங்கங்களால் அதனை எதிர்க்க முடியாது எனவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் சுங்க திணைக்களத்தின தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திறமையான அதிகாரிகளை பிரதானிகளாக நியமிக்க அமைச்சரவைக்கு அதிகாரம் இருக்கின்றது எனவும் அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பதில் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவருடன் இணைந்து பணியாற்று மாறும் அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.