வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்க நடவடிக்கை! ரணிலுடனான சந்திப்பில் தீர்மானம்

Report Print Murali Murali in அரசியல்

அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமான விசேட கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை குறித்து எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இதன் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதுவரையிலும், அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளான அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers