கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பாடசாலை மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் ஊடக பேச்சாளருமான அருந்தவபாலன் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடத்தல்களுடன் அரசியல்வாதிகளிற்கும் தொடர்புள்ளமை தொடர்பிலும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அதிக மதுபானசாலைகள் அரசியல் பின்புலத்துடனேயே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியினால் ஆரம்பித்த வைக்கப்பட்ட குறித்த போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை அவரால் மாத்திரம் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், அனைவரும் ஒன்று திரண்டு போதைப்பொருள் பாவணையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.