அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் அமைப்பிற்கு அமைய நாடாளுமன்றில் அதி கூடிய ஆசனங்களை பெற்று கொண்ட கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இணைந்தே தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க முடியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரை கொண்டு தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்துவது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பினை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.