ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை மக்களின் ஆணையை பெற்று கொள்வது சிறந்தது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்கு பிறகு தேவையான எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.
இதனால் ஜனாதிபதி மக்கள் மத்திக்கு சென்று புதிய ஆணையை கோருவது மிக சிறந்தது. மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றேன்.
ஆனால் அதற்கு முன் தேசிய தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.