மகிந்த அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் இடையிலான வித்தியாசம் பற்றி கூறும் அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை எதிர்வரும் 7 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து, நிறைவேற்ற எண்ணியுள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையும் கட்சி எவை என்பது பற்றி தற்போது கூற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலான நாடாளுமன்றத்தின் அனுமதி மட்டுமே எமக்கு தேவைப்படுகிறது. அந்த அனுமதியை கோரி யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள கிரியெல்ல, மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் எவரிடமும் அனுமதியை பெறாமல், 60 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளை வழங்கியிருந்தார்.

எனினும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் மேல் அதிகரிக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். இது தான் தற்போதுள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.