புதிய கூட்டணியின் தலைவராக நானே இருக்க வேண்டும்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்க உள்ள புதிய கூட்டணியின் தலைவராக தானே இருக்க வேண்டும் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

அமைக்கப்பட உள்ளதாக கூறப்படும் உத்தேச அரசியல் கூட்டணி சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முதலில் கூட்டணி குறித்து கலந்துரையாட வேண்டும். கட்டாயம் அந்த கூட்டணியின் தலைவராக கட்டாயம் நானே இருக்க வேண்டும்.

தற்போது நான் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக இருந்து வருகிறேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச இன்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.