உருளைக்கிழங்கு செய்கையாளர்களை ஊக்குவிக்க புதிய திட்டம்!

Report Print Vamathevan in அரசியல்

உருளைக்கிழங்கு செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கு இறக்குமதி வரியினை 50 ரூபாவாக அதிகரிக்க இணக்கம் எட்டபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாட்டின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதேவேளை, அறுவடையின் பயன்களை எமது நாட்டு விவசாய உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பாதிப்படையாத வகையில் பெற்றுக்கொள்ளும் முகமாக இறக்குமதி வரியினை 50 ரூபாவாக அதிகரிக்க இணக்கம் எட்டபட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.