தயாரானது மரண தண்டனை கைதிகளில் பெயர் பட்டியல்! இறுதி தீர்மானத்திற்காக அனுப்பி வைப்பு

Report Print Murali Murali in அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் பெயர் அடங்கிய பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல இதனை தெரிவித்துள்ளார். வெலிமடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள். எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒருவரையாவது தூக்கில் போட்டால் தான் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் அச்சத்தை ஏற்டுத்தலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது