ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரியின் சகோதரர்!

Report Print Vethu Vethu in அரசியல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியின் சகோதரர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையும் போது சிறிசேன குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அப்படி இல்லை என்றால் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்காக ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை டட்லி சிறிசேனவுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அண்மையில் அரசியல் களத்திற்கு வந்த டட்லி சிறிசேன, ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் ஊடக கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தனது கருத்தினை நாட்டிற்கு அவர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers