நிஷாந்த விக்ரமசிங்கவின் மற்றுமொரு ஊழல் அம்பலம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, மத்தள சர்வதேச விமான நிலையத்தில் சமையல் அறை ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை கேள்விமனு நடைமுறைகளை மீறி, தான் தெரிவு செய்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கணக்காய்வாளர் மஹேஷ் நாணயக்கார இது குறித்து ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் சாட்சியமளித்திருந்தார்.

நிஷாந்த விக்ரமசிங்க, தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சமையலறையை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலாபத்தில் இயங்கிய ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், நிஷாந்த விக்ரமசிங்க நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த காலத்திலேயே நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது.

அந்த நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.

Latest Offers