துமிந்த திஸாநாயக்க ரணிலுக்கு உதவுகிறார்: கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றியதன் மூலம் துமிந்த திஸாநாயக்க இல்லாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

அத்துடன் இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயலாக தெரிகிறது.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பற்றி பேசுவதில் பயனில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பெரிய கூட்டணியை உருவாக்கி வருகின்றனர்.

இப்படியான சந்தர்ப்பத்தில் இல்லாத ஒன்றை பேசுவது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் இருப்புக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேரடியாக உதவதாகும்.

மைத்திரி - மகிந்த ஆகியோரின் ஒற்றுமையை சீர்குலைத்து, புதிய கூட்டணியை துண்டு துண்டுகளாக உடைத்து, ரணில் விக்ரமசிங்கவின் தேவையை நிறைவேற்றும் நடவடிக்கையில் துமிந்த திஸாநாயக்க ஈடுபட்டுள்ளார் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.