மாலைதீவு ஜனாதிபதி இலங்கையில்

Report Print Steephen Steephen in அரசியல்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் உட்பட அந்த நாட்டின் தூதுக்குழுவினர் இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

அவர்கள் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் விசேட விமான மூலம் இன்று முற்பகல் 11.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளனர்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹமட் அண்மையில் பதவியேற்றார்.

Latest Offers