மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் இடையில் பனிப்போர்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து அமைக்க உள்ள புதிய அரசியல் கூட்டணியின் தலைவர் பதவியை பெற்று கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் தலைவர் பதவி கட்டாயம் தமக்கே கிடைக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச நேற்று கண்டியில் கூறியிருந்தார்.

தற்போது தலைவராக இல்லாவிட்டாலும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக இருந்து வருவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேற்படி இரண்டு கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராகவும் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால், தோல்வியடைவார் என்பதால், அவருக்கு வாய்ப்பளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானத்தை எடுக்கப்படவில்லை என மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கூறியிருந்தாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான நிலையில், புதிய கூட்டணியின் தலைமை பதவி தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15 லட்சத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக, புதிய கூட்டணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மகிந்த தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Latest Offers