வர்த்தகரை பாதுகாக்கவே சுங்க பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டார்: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

வர்த்தகர் ஒருவரை பாதுகாக்கவே சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரை அரசாங்கம் பதவியில் இருந்து நீக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு தேவையான வகையில், அநீதியான முறையில் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற சமய நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை தேசிய அரசாங்கத்தை அமைப்பது கேலிக்குரியது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார். திணைக்களத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

Latest Offers