மிக் 27 விமானங்களை கொள்வனவு செய்த இலங்கை! வெளியாகும் பல ரகசியங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

மிக் 27 ரக போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யவில்லை என்று யுக்ரெய்ன் அரசாங்கம் மறுக்கின்ற போதும் சிரேஸ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் பல உண்மை தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி, இலங்கையின் விமானப்படையுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை வெளியானது.

இதன்படி யுக்ரெய்ன் நாட்டில் இருந்து 4 மிக் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

இதில் ஒன்றின் பெறுமதி 3462,000 டொலர்களாகும் அல்லது 265 மில்லியன் ரூபாவாகும். இந்த விமானங்கள் 1980- 1983ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.

யுக்ரெய்ன் அரசாங்கத்தின் யுகரின்மார்ஸ் நிறுவனமே இவற்றை உற்பத்தி செய்திருந்தது. இதன்போது பாரிய மோசடிகள் இடம்பெற்றிருந்தன.

2000 ஆம் ஆண்டு மே 25ஆம் திதி நான்கு விமானங்கள் கொள்னவு செய்யப்பட்டன. இதில் ஒன்றின் விலை 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இரண்டாவது கட்டமாக 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இரண்டு மிக் 27 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

இதில் ஒன்றின் விலை 1.6 மில்லியன் டொலர்களாகும். இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்தமை காரணமாக தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர் தாம் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக குறிப்பிட்டுள்ள இக்பால் அத்தாஸ் அங்கும் தமக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Latest Offers