சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவிநீக்கம் செய்யப்பட்டமைக்கான பின்னணி அம்பலம்?

Report Print Ajith Ajith in அரசியல்

சந்தேகத்துக்குரிய 143 கொள்கலன்களை சோதனையிட உத்தரவிட்டமையை அடுத்தே சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது.

சார்ல்ஸ் பதவிவிலக்கப்பட்டமையை அடுத்து சுங்கத்திணைக்களத்தினர் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசாங்கத்துக்கு பாரிய நிதிநட்டம் ஏற்பட்டு வருகிறது.

முன்னாள் சுங்கப்பணிப்பாளர் பி.எஸ்.எம் சார்ல்ஸ், சோதனையிடக்கூறிய கொள்கலன்களுடன் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்பதிகாரி துஸித ஹல்லோலுவவுக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கல்லோலுவவே, பி.எஸ்.எம் சார்ல்ஸை பதவிநீக்கும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இது தொடர்பில் நிதியமைச்சின் தரப்பில் இருந்து மறுப்பறிக்கைகள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers