தூக்கு தண்டனை மட்டும் தீர்வாகாது! மகிந்த சொல்லும் திட்டம்

Report Print Murali Murali in அரசியல்

போதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானம் மாத்திரம் போதுமானதல்ல என்று எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தின் பின்னால் சில பொலிஸ் அதிகாரிகள் செயற்படுகின்றனர். இந்த அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளும், இராணுவமும் இணைந்து தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் சட்டவிரோதமாக செயற்படும் பொலிஸாரையும் இனங்கண்டுகொள்ளலாம் என மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

Latest Offers