மெய்யாகவே அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமா? என மஹிந்த கேள்வி

Report Print Kamel Kamel in அரசியல்

மெய்யாகவே அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமா என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாது, உண்மையிலேயே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா என அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து விஹாரைகளில் வழிபாடுகளை மேற்கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக வரையறுக்க வேண்டுமென பிரச்சாரம் செய்த இந்த அரசாங்கம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers