ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளரில் முன்னிலைப் பெறுகிறார்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கருத்தை கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு பொருத்தமானவர்களாவர்.

இந்த நிலையில் மூவரில் ஒருவரை தகுந்த நேரத்தில் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் என்று அமைச்சர் நவீன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முன்னிலை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பற்றி சிந்திப்பதற்கு இன்னும் காலம் இருப்பதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.