இலங்கையுடன் உறவை விருத்தி செய்ய அமெரிக்கா விருப்பம்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்க அரசாங்கம், இலங்கையுடன் உறவை விருத்தி செய்துக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக அந்த நாட்டின் ராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே மைக் பெம்பியோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்தும், அரசமைப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் செயற்படும் என்று நம்பிக்கை அமெரிக்காவுக்கு உள்ளது.

இந்தநிலையில் அதனுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக பெம்பியோ குறிப்பிட்டுள்ளார்.