ஐக்கிய நாடுகளின் நிபுணர் இலங்கை வருகிறார்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகளின் பாலியல் நோக்குநிலை தொடர்பான நிபுணர், விக்டர் மெட்ரிக்கல் போர்லோஸ் இலங்கைக்கு வரவுள்ளார்.

எனினும் அவர் இலங்கைக்கு வரும் திகதி தொடர்பாக இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை.

உண்மையை கண்டறிதல் என்ற நோக்குடன் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சிறப்பு அலுவலர் எலைஸ் ஓச்சென்பெனின் தெரிவித்துள்ளார்.

நாடுகளில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள், மற்றும் புறக்கணிப்புகளை கண்காணிக்கவென்று பாலியல் நோக்குநிலை நிபுணர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்களுக்கான அடிப்படைகளை ஆராய்வது இந்த நிபுணரின் அடிப்படை பணியாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.