அகில இலங்கை ஜம்யத்துல் உலமா தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கையின் சுதந்திர போராட்ட வீரர் சேகுதீதீ பிறந்த தோப்பூரில் உள்ள சுற்று வட்டத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
இதன்போது தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு அரபுக் கல்லூரியிலிருந்து தோப்பூர் சுற்று வட்டம் வரை நடைபவனியாக வருகை தந்தனர்.
இதன்பின் தோப்பூர் சுற்று வட்டத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மூன்று மதங்களையும் சேர்ந்த மத குருமார்களின் உரைகள் இடம்பெற்றதோடு சுதந்திர போராட்ட வீரர் சேகுதீதீ அவர்கள் தொடர்பான விசேட உரையும் இடம்பெற்றது.