சுதந்திர தினத்தில் மகிந்தவை கண்டவுடன் மைத்திரியின் மகன் மகிழ்ச்சியில்

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சுதந்திர தின நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத்தரும்போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார்.

அத்துடன், சுகநல விசாரிப்புக்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.