மீண்டும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி விசேட பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவை, அவர் சந்தித்துப் பேசியுள்ள நிலையில் நாளை காலை அவர் கடமைகளை பொறுப்பேற்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் நாளையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றால் சுங்கத் திணைக்கள வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் சாத்தியம் காணப்படுகின்றது.