நான் எதனையும் நேருக்கு நேர் கூறும் மனிதன்: குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலையே நடத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக பொதுஜன பெரமுனவுக்கு வீழ்ச்சியடையவில்லை. நான் நேரடியாக பேசும் மனிதன். எதனை கூறுவதாக இருந்தாலும் நேருக்கு நேர் கூறிவிடுவேன்.

சிறிசேனவிடமும் நேரிடையாக கூறுவேன். மகிந்தவிடமும் நேரிடையாக கூறுவேன். ஜனாதிபதித் தேர்தலே நடக்கும். இவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவார்கள் என நான் நம்பவில்லை.

அரசாங்கம் பயம். மாகாண சபைத் தேர்தல் நடத்தினால், அரசாங்கம் தோல்வியடையும். அப்படி தோல்வியடைந்தால், அந்த தோல்வியில் இருந்து அரசாங்கத்திற்கு மீள முடியாது. இதனால், மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அவர்கள் வழங்க மாட்டார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமில்லாமல், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தை இரத்துச் செய்ய முடியாது.

இதனால், குறித்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும். ஒக்டோபர் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.