மைத்திரிக்கு பெரும் ஏமாற்றம்! பயனற்று போன துருப்புச் சீட்டு

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துருப்புச் சீட்டு ஒன்று பயனற்று போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகால அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை ஆராய்வதற்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை தேர்தலின் போது பிரதான துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதற்கு மைத்திரி மேற்கொண்ட முயற்சி வீணாகியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிதத் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித பயனையும் பெற முடியும் என்ற நம்பிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கேனும் இல்லை என கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் பரிசோதனை நடவடிக்கை மற்றும் தரவுகளை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அறிக்கை எதிர்வரும் ஜுலை மாதம் அல்லது தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதனை தேர்தலின் போது முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார் என கூறப்படுகின்றது.