ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை! பொதுபல சேனா கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்ததாகவும் எனினும் அது நடக்காதது வருத்தமளிப்பதாகவும் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் நலன் விசாரிக்கும் நோக்கில் இன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்று திரும்பும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.