மின்சாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறீதரன் எம்.பி உடனடித் தீர்வு!

Report Print Kaviyan in அரசியல்

இலங்கையின் மின்சார சபையினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துரையாடல் ஒன்றை இன்று நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி இலங்கை மின்சாரசபையின் மின் வழங்கல் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது மின்சாரக் கட்டணம் தொடர்பான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மின் இணைப்பு வழங்கப்படாத இடங்களுக்கு மக்களின் நன்மை கருதி மின் இணைப்புக்களை விரைந்து வழங்கி வீடுகளுக்கு மின்னிணைப்பை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கை, நகர மின் விளக்குகளைச் சீராக ஒளிர வைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் குணதிலக தலைமையில்நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி கலந்துரையாடலில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உப தவிசாளர் தவபாலன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மு.சிவமோகன், கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன், யாழ்ப்பாண மாவட்ட மின் அத்தியட்சகர் ஆதிரன், கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சகர் குகராஜ், கிளிநொச்சி மாவட்ட மின் பொறியியலாளர் பர்சாட் ஆகியோர் கலந்துகொண்டு மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் அவற்றுக்கான விரைந்து தீர்வு காணல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரப் பாவனைக் கட்டணப் பட்டியல் குறித்த காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பெறாதமையால் மின்சாரப் பாவனைக் கட்டணம் அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளார்.

அதனால் மக்கள் பெருந்தொகைப் பணத்தைக் கட்ட முடியாது அவதிப்படுவதாகவும் அவர்களுக்கான மின்னிணைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தீர்வுகாண்பதற்காண வழியைக் கைக்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் மின்சாரக் கட்டணங்களைக் கட்ட குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இடைநிறுத்தப்பட்ட வீடுகளுக்கான மின்சார இணைப்புக்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் அங்கு கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் பலரது வீடுகளுக்கு இன்னமும் மின்னிணைப்பு வழங்கப்படவில்லை அவர்களுக்கு மின்னிணைப்பு வழங்குவது பற்றி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு அதனை இலவச மின்னிணைப்பாக வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு நாமும் எம்மாலான பணிகளை முன்னெடுப்போம் என்று கூறினார்.

Latest Offers

loading...