கடிதம் மூலம் உத்தரவிட்ட ஜனாதிபதி? மறுக்கும் லியனகே

Report Print Kamel Kamel in அரசியல்

கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்கு திரும்ப அழைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஊடாக ஏ.எஸ்.பி.லியனகேவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரில் அமைந்துள்ள பாடசாலையொன்று தொடர்பில் தூதுவர் லியனகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தம்மை அரசாங்கம் மீள அழைக்கவில்லை எனவும் தாம் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தாம் நாட்டுக்கு மீள அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர கடமைகள் பூர்த்தியானதன் பின்னர் தாம் நாடு திரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர் பதவியொன்றை லியனகே எதிர்பார்த்தார் எனவும் அது கிடைக்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், தாம் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாக லியனகே தெரிவித்துள்ளார்.