சரத் பொன்சேகா ஏன் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை?

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஃபீல்ட் மார்ஷல் பதவியை சிறுமைக்குட்படுத்த முடியாத காரணத்தினால் தேசிய சுதந்திர தின நிழ்வில் தான் பங்கேற்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு களனி - பொல்கொல்லை பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்கு அமைய ஃபீல்ட் மார்ஷல் ஒருவர் இராணுவ அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொள்ளும்போது, பேரணி சீர்நிலைக்கு வந்து அதிலுள்ள இராணுவத்தின் அனைத்து வர்ண இலச்சினைகளும் கீழிறக்கப்படவேண்டும்.

எனினும், இவை அனைத்தையும் செய்யாமல், தமக்கு வெறுமனே அழைப்பு விடுக்கப்பட்டது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாம் வகிக்கும் ஃபீல்ட் மார்ஷல் பதவிக்குரிய கௌரவத்தை வழங்காத பேரணியில் ஃபீல்ட் மார்ஷலாக கலந்துகொள்வதை தாம் புறக்கணித்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers